உள்ளூர் செய்திகள்
மத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதி சிக்கினர்
மத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த கண்ணுகானூர் பகுதியில் அரசு மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கண்ணுகானூர் பகுதியை சேர்ந்த ராஜா (51) அவரது மனைவி வேடியம்மாள் (37) ஆகிய இருவரும் வீட்டில் அரசு மதுபானம் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் பதுக்கி வைத்திருந்த 50 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை கைது செய்து ராஜா வை கிருஷ்ணகிரி கிளைச் சிறையிலும், அவரது மனைவி வேடியம்மாளை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர்.