உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை படத்தில் காணலாம்.

அரசம்பட்டியில் ஊராட்சி தலைவரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

Published On 2022-05-17 14:05 IST   |   Update On 2022-05-17 14:05:00 IST
அரசம்பட்டியில் ஊராட்சி தலைவரை கண்டித்து பெண்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் அரசம்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட புட்டன் கடை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணிக்கான புதிய அட்டை வழங்க கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை நாடியுள்ளனர். 

இதை சாதகமாக்கி பஞ்சாயத்து நிர்வாகம் பிரதம மந்திரியின் ஜல் ஜீவன் திட்டத்திற்கான ரூ.1000 டெபாசிட் தொகையை கட்டினால் தான் 100 நாள் வேலை அட்டை வழங்குவதாக கூறினர். 

இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் 50_ற்கும் மேற்பட்டோர் தருமபுரி-திருப்பத்தூர் சாலையில் புட்டன்கடை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
பின்னர் அங்கு வந்த போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ மற்றும் பாரூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடத்தை கலைத்தனர்.

Similar News