உள்ளூர் செய்திகள்
மழலையர் பிரிவில் முதல் பரிசு வென்ற சுகிதாவுக்கு பரிசு வழங்கப்பட்டது.

குழந்தைகளுக்கு ஓவிய போட்டி

Update: 2022-05-16 10:02 GMT
சீர்காழியில் குழந்தைகளுக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டது.
சீர்காழி:

சீர்காழியில் செம்பனார் ்கோயில் அழகுஜோதி அகாடமி சார்பில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, விழிப்புணர்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. 

கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து நற்சிந்தனைகளை பெறும் வகையிலும், உலகம் வெப்பமயமாதல் மற்றும் சுற்றுப்புற சூழலை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இந்த விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. எல்.கே.ஜி முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ -மாணவிகளுக்கு வயது வாரியாக பிரித்து மழைநீர் சேகரிப்பும், நிலத்தடி நீர் பெருக்கம் குறித்த ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதேபோல் இந்திய பண்டிகைகள் சுற்று சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு அழகு ஜோதி அகாடமி தொடர்பாளர் சிவா தலைமை வகித்தார்.

சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடை நம்பி, விவேகானந்தா நற்பணி இயக்க தலைவர் துரைராஜ், உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கினர்.மேலும் இதில் பங்கேற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்து. 

அப்போது அகாடமி தொடர்பாளர் சிவா பேசுகையில், கோடை விடுமுறையில் மாணவ மாணவிகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில் அவர்களை கோடைகா லத்தின் பயிற்சி வகுப்புகள் மற்றும் நடன வகுப்புகள் சதுரங்க பயிற்சி போன்ற பயனுள்ள பயிற்சி வகுப்பு களில் பெற்றோர்கள் பங்கேற்க வைத்து அவர்களின் சிந்தனையை மேம்படுத்தும் வகையில் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்றார்.

Tags:    

Similar News