உள்ளூர் செய்திகள்
குடும்ப தகராறில் விஷம் குடித்த தொழிலாளி சாவு
ஊத்தங்கரை அருகே விஷம் குடித்த தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள கொட்டுக்காரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது38). கூலி தொழிலாளியான இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது.
இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த 4-ந்தேதி அன்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட இளங்கோவன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக சிங்காரபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.