உள்ளூர் செய்திகள்
.

மத்தூர் அருகே மோட்டார்சைக்கிள் மரத்தில் மோதி வாலிபர் சாவு

Published On 2022-05-15 15:12 IST   |   Update On 2022-05-15 15:12:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் வாலிபர் பலியானார்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பில்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது 40). 

இவர் இன்று காலை 8 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பில்லகொட்டாயில்  இருந்து மார்ரஹள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. 

இதில் பலத்த காயமடைந்த தேவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்தில் பலியான தேவனுக்கு மஞ்சு என்ற மனைவியும் ஆகாஷ் (17) என்ற மகனும், ஆசிகா (13) என்ற மகளும் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News