உள்ளூர் செய்திகள்
பாசன ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது எடுத்த படம்.

கந்தர்வகோட்டையில் பாசன ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-05-15 13:44 IST   |   Update On 2022-05-15 13:44:00 IST
கந்தர்வகோட்டை அருகே பாசன ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
கந்தர்வகோட்டை அருகே பாசன ஏரியில் இருந்த  ஆக்கிரமிப்புகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா குறும்பூண்டிஊராட்சியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பிடாரி ஏரி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

இதனால் மழைக்காலங்களில் போதுமான நீரை சேகரிக்காமல் விவசாயம் கேள்விக்குறியாக இருந்தது. 

எனவேபாசன  ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீரை சேமிக்க பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினருக்கும் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்தநிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று  ஏரியின் எல்லைகள் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. 

கந்தர்வகோட்டை வட்டாட்சியர் புவியரசன், வருவாய் அலுவலர் சேகர், கிராம நிர்வாக அலுவலர்ரம்யா, உதவியாளர் கண்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்பாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Similar News