உள்ளூர் செய்திகள்
மாணவர்கள் தனித்திறமைகளை அடையாளம் கண்டு பயணித்தால் இலக்கை அடையலாம்
மாணவர்கள் தனித்திறமைகளை அடையாளம் கண்டு பயணித்தால் இலக்கை அடையலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர்:
அரியலூர் அடுத்த விளாங்குடி அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் சமூக நலத்துறை சார்பில் அட்சய திருதியை முன்னிட்டு, இன்றைய இளைஞர்களும், சமுதாயமும் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட கலந்து கொண்ட கலெக்டர் ரமண சரஸ்வதி பேசும் போது,
அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மென்மேலும் வளரும் என்பது நம்பிக்கை பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக செயல்படுத்தி வருகிறது. எனவே, பெண்கள் படித்து சமுதாய மாற்றத்தை உருவாக்க வேண்டும்.
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் நடைபெற்று வருகிறது. அதனையும் நாம் தடுக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட உங்களை போன்ற இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். மாணவர்கள் தமது தனித்திறமையை அடையாளம் கண்டு அதனை நோக்கியே பயணித்தால் இலக்கை அடையளாம் என்றார்.
பின்னர் அவர், கல்லூரியில் நடைபெற்ற வளாக நேர்காணலில் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.