உள்ளூர் செய்திகள்
.

ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Published On 2022-05-13 14:15 IST   |   Update On 2022-05-13 14:15:00 IST
ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் ரூ.6 லட்சம் மோசடிசெய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் லாரன்ஸ் (வயது 37). இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது ஜெர்மனி நாட்டில் ரூ.85 ஆயிரம் சம்பளத்துக்கு வேலை தயாராக இருப்பதாக ஆசை காட்டினார். 

இதை நம்பிய ராபர்ட் லாரன்ஸ், அவரிடம் தொடர்ந்து பேசினார்.

அப்போது நுழைவு கட்டணமாக ரூ.5 லட்சத்து 96 ஆயிரம் பணம் கட்டணமாக கட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து ராபர்ட் லாரன்ஸ், அவரது வங்கி கணக்குக்கு ரூ.5.96 லட்சத்தை கட்டினார். அதன்பின்னர் அந்த நபர் ,  தொடர்பு கொள்ளவில்லை.


இதனால் ராபர்ட் லாரன்ஸ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெர்மனி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ஓசூர் வாலிபரிடம் பணம் மோசடி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Similar News