உள்ளூர் செய்திகள்
.

ஓசூரில் பெண்ணின் கைப்பையில் இருந்த பணம் திருட்டு: ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் கைது

Published On 2022-05-13 13:13 IST   |   Update On 2022-05-13 13:13:00 IST
ஓசூரில் பெண்ணின் கைப்பையில் இருந்த பணம் திருடியதனால் ஆந்திராவை சேர்ந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓசூர்,

ஓசூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரது மனைவி உமாமகேஸ்வரி (வயது32). இவர், ஒரு வக்கீல்  அலுவலகத்தில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று அவர், ஓசூர் - பாகலூர் சாலையில் பஸ்-ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது 3 பெண்கள் நைசாக வந்து, உமாமகேஸ்வரியின் கைப்பையில் இருந்த 3,100- ரூபாயை திருடினர். கையும், களவுமாக பிடிபட்ட அவர்கள் மூவரும், ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். 

விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே பாபு நகரை சேர்ந்த ஜோதி (30), மற்றொரு ஜோதி (32) மற்றும் சபீனா (25) என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News