உள்ளூர் செய்திகள்
கஞ்சா வழக்கு போடுவதாக கூறி மிரட்டல்: 25 வயது இளம்பெண் பலாத்காரம்- 2 போலீசார் மீது புகார்
இளம்பெண்ணிடம் கஞ்சா வழக்கு போட்டு விடுவதாக மிரட்டி 2 போலீசார் பலாத்காரம் செய்த சம்பவம் சூளகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உத்தனபள்ளி சாலையில் பெல்லட்டி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் தாபா ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவரது ஓட்டலில், சூளகிரி போலீஸ் நிலையத்தில் பணி செய்யும் முருகானந்தம், மாரியப்பா என்ற போலீசார், உணவு வாங்கிச்செல்வது வழக்கம். இந்த நிலையில், அவர்கள் இருவரும், ஓட்டல் நடத்தும் பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் தரமறுத்தால், கர்நாடக மதுபானங்கள் மற்றும் கஞ்சா பொட்டலத்தை வைத்து வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் இருவரும் அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஓசூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், முருகானந்தம், மாரியப்பா ஆகிய 2 போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.