உள்ளூர் செய்திகள்
கே.ஆர்.பி அணை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2022-05-12 14:15 IST   |   Update On 2022-05-12 14:15:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கே.ஆர்.பி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 11 நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருவதாலும், கே.ஆர்.பி., அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையாலும், கே.ஆர்.பி, அணைக்கு கடந்த, 8ந் தேதி 484 கன அடியாக நீர்வரத்து இருந்தது. 

கடந்த 3 நாட்களாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால், கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 531 கன அடியாக மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் அணையின் நீர்மட்டம் மொத்தம் உள்ள, 52 அடியில் நேற்று, 46.45 அடியாக உயர்ந்தது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து கடந்த இரண்டு நாளில் அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து, 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.

Similar News