உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் நடந்தபோது எடுத்தப்படம்

தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம்

Published On 2022-05-12 14:15 IST   |   Update On 2022-05-12 14:15:00 IST
கிருஷ்ணகிரியில் தீத்தடுப்பு விழிப்புணர்வு செயல்விளக்கம் நடந்தது.
ராயக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

ராயக்கோட்டை சிறப்பு நிலைய அலுவலர் செல்வம் மற்றும் நிலைய பணியாளர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதனை தடுப்பது மற்றும் தீவிபத்தில் காயம் ஏற்பட்டால் பொதுமக்களை எவ்வாறு மீட்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. 

மேலும் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளித்தனர்.

Similar News