உள்ளூர் செய்திகள்
ஸ்மார்ட் போர்டு உபகரணங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கினார்.

திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ரூ.6.6 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை- ஐ.வி.டி.பி நிறுவனம் வழங்கியது

Published On 2022-05-10 15:43 IST   |   Update On 2022-05-10 15:43:00 IST
திருப்பூர் செயின்ட் ஜோசப் கல்லூரிக்கு ஐ.வி.டி.பி நிறுவனம் ரூ.6.6 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை மற்றும் ஸ்மார்ட் போர்டு உபகரணங்களை வழங்கியது.
கிருஷ்ணகிரி, 

மகளிர் முன்னேற்றத்திலும், சமூக மேம்பாட்டிலும் வெற்றி கண்டுள்ள ஐ.வி.டி.பி நிறுவனமானது, கல்விப் பணியின் ஒரு பகுதியாக திருப்பூர் செயின்ட்ஜோசப் கல்லூரியில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 60 ஏழை எளிய மாணவியருக்கு தலா ரூ.7500- என மொத்தம் ரூ.4.5 லட்சம் கல்வி உதவித்தொகையையும், அக்கல்லூரியின் கற்பித்தல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ரூ.2.1 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் போர்டு உபகரணங்களையும் வழங்கி உதவினார்.

கல்லூரியின் முதல்வர் குழந்தை தெரசா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்மார்ட் உபகரணங்களை ஐ.வி.டி.பி நிறுவனத் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் வழங்கி ெதாடங்கி வைத்தார். 

பின்னர் அவர் பேசியதாவது, கல்லூரி மாணவர்களிடம், இந்த ஸ்மார்ட் போர்டு உபகரணங்களின் மூலம் கற்றல் திறனை மேன்மேலும் மேம்படுத்தி, சிறந்த முறையில் கல்வி பயின்று தங்களின் பெற்றோருக்கும் இக்கல்லூரிக்கும் பெருமை சேர்க்குமாறு அறிவுரை வழங்கினார்.

இக் கல்லூரியின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஐ.வி.டி.பி நிறுவனம் இதுவரை ரூ.12.43 லட்சம் செலவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News