உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 44 கள்ள துப்பாக்கிகள் போலீசில் ஒப்படைப்பு

Published On 2022-05-10 15:42 IST   |   Update On 2022-05-10 15:42:00 IST
கள்ளத் துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என போலீசார் விடுத்த கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் இதுவரை 44 பாக்கிகளை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டமானது 3 மாநில எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதிகள் அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாகும்.

இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் யானை, கரடி, சிறுத்தை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விவசாய நிலங்களை சேதப்படுத்துவதும் பொதுமக்களின் உயிரை சூறையாடுவதும் அவ்வப்போது நடைபெற்று வந்தது. 

இதனால் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயிகள் சிலர் வனவிலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள நாட்டு துப்பாக்கிகளை கள்ளத்தனமாக தயாரித்து வனவிலங்குகளை விரட்டுவதற்கு வேட்டையாடுவதற்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாக்கூர் மாவட்டத்தில்  அனைத்து  கள்ளதுப்பாக்கிகளையும் பறிமுதல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து தேன்கனிக்கோட்டை டி.எஸ்பி கிருத்திகா உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ் மற்றும் சுப்பிரமணி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அப்போது  தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் கள்ள துப்பாக்கிகளை தாமாக முன்வந்து ஒப்படைப்பர்க ள்மீது எந்தவித வழக்குகளும் கைது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

 அதனடிப்படையில் அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள் தண்டோரா மூலம் வரும் மே 10-ந் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் பொது மக்கள் தாமாக முன்வந்து போலீசில் ஒப்படைக்கவேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு பிறகு கள்ளதுப்பாக்கி வைத்திருப்ப வர்கள் ஒரு சிலர் தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்து வருகின்றனர்.
இதுவரை தேன்கனிக்கோட்டை தாலுகாவில் மட்டும் 33 துப்பாக்கிகளும் மொத்தம் 44 துப்பாக்கிகளின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

Similar News