உள்ளூர் செய்திகள்
பலி

ஊத்தங்கரை அருகே சூறைக்காற்றுடன் மழை: பறந்து வந்த இரும்பு தகடு தாக்கி பெண் பலி

Published On 2022-05-09 10:17 GMT   |   Update On 2022-05-09 10:17 GMT
ஊத்தங்கரை அருகே சூறைக்காற்று பலமாக வீசியதால் இரும்பு தகடு தலையில் விழுந்து பெண் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கொம்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பச்சையம்மாள் (வயது 43).

இந்த நிலையில் நேற்று ஊத்தங்கரை பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வீட்டின் வெளியே துவைத்து காயவைத்திருந்த துணிகளை பச்சையம்மாள் சென்றார்.

அப்போது வீட்டின் அருகே உள்ள உறவினர் வீட்டின் மேற்கூரையில் மழைக்கு ஒழுகாமல் இருக்கு ஒரு இரும்பு தகர சீட்டு வைத்திருந்தனர்.

சூறைக்காற்று பலமாக வீசியதால் இரும்பு தகடு பறந்து பச்சையம்மாள் தலையில் விழுந்தது. இதில் பச்சையம்மாள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் நேரில் சென்று பச்சையம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News