உள்ளூர் செய்திகள்
.

போச்சம்பள்ளி அருகே தொழிலாளியை தாக்கி தம்பி உள்பட 2 பேர் மீது வழக்கு

Published On 2022-05-09 15:36 IST   |   Update On 2022-05-09 15:36:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தொழிலாளியை தாக்கிய தம்பி உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள பெட்ரஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஸ் (வயது52). இவரது சகோதரர் சரவணன். 

இந்த நிலையில் இவர்களுக்கு இடையே அடிக்கடி நிலத்தகராறு பிரச்சினை இருந்து வந்தது. இதனால் கடந்த 6-ந்தேதி அன்று சரவணன் தனது அண்ணன் என்று கூட பார்க்காமல் மாதேசை சரமாரியாக தாக்கியுள்ளார். 

இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த மாதேசை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்து மாதேஸ் பாரூர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சரவணன், முனியம்மாள் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News