உள்ளூர் செய்திகள்
கர்நாடகா மாநில கவர்னர் தாவார்சந்த் கேலாட்டுக்கு கிருஷ்ணகிரியில் வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

கிருஷ்ணகிரிக்கு வந்த கர்நாடக மாநில கவர்னருக்கு வரவேற்பு

Published On 2022-05-09 15:18 IST   |   Update On 2022-05-09 15:18:00 IST
கிருஷ்ணகிரிக்கு வந்த கர்நாடக மாநில கவர்னருக்கு டிஆர்ஓ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரிக்கு வந்த கர்நாடக மாநில கவர்னருக்கு டிஆர்ஓ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கர்நாடகா மாநில கவர்னர் தாவார்சந்த் கேலாட், வேலூர் மாவட்டத்தில் உள்ள தங்கக் கோயிலுக்கு  புறப்பட்டுச் சென்றார். 

வழியில், தமிழக மாநில எல்லையான அத்திப்பள்ளி டோல்கேட் அருகில், ஓசூர் ஆர்.டி.ஓ., தேன்மொழி, தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

பின்னர் அங்கிருந்து ஏ.எஸ்.பி., அரவிந்த் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி விருந்தினர் மாளிகைக்கு வந்தார்.அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணகிரி அருகில் உள்ள சுண்டம்பட்டி பர்சவ பத்மாவதி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, ஆர்.டி.ஓ., சதீஷ்குமார், ஏ.டி.எஸ்.பி., விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். 

அங்கிருந்து, 9.45 மணிக்கு புறப்பட்ட கவர்னர் வேலூரில் உள்ள தங்கக் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டார். அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு சென்றடைந்தார்.

Similar News