உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சட்ட விதிகளை மத்திய அரசு மீறி விட்டது- முன்னாள் எம்.பி. ராமதாஸ் அறிக்கை

Published On 2022-05-08 14:17 IST   |   Update On 2022-05-08 14:17:00 IST
எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் சட்ட விதிகளை மத்திய அரசு மீறி விட்டது என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.
புதுச்சேரி: 

முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

யூனியன் பிரதேச சட்டம் பாராளுமன்றத்தில்   விவாதத்துக்கு வந்த போது புதுவை சட்டமன்றத்திற்கு 3 எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்வதற்கான 3 நோக்கங்களை அப்போதைய உள்துறை அமைச்சர்  லால்பகதூர் சாஸ்திரி வரையறுத்து கூறினார்.  

சட்டமன்றத்தில் இடம்பெறாத பெரிய சமுதாயத்தை சேர்ந்தவர்,, பெண்கள், அரசுக்கு  ஆலோசனை கூற தகுதி வாய்ந்த பொறியாளர்கள், கல்வியாளர்கள் என 3 பேர் நியமனம் செய்யப்பட வேண்டும்.

இந்த 3 உன்னத நோக்கங்களையும் மத்திய அரசு யூனியன் பிரதேச சட்டம் 1963 விதி எண் 3 உப விதி எண் 3-க்கு கீழ் கொண்டு வந்திருக்க வேண்டும். இதை செய்யாததால் மத்திய அரசு வெளிப்படையாக தனது கட்சிக்காரர்களையும் காங்கிரஸ், தி.மு.க.விலிருந்து கட்சி மாறியவர்களையும் புதுவையை சேராத-வர்களையும் நியமன எம்.எல்.ஏ.களாக்கி சட்டத்தின் நோக்கங்களை வீணடித்து விட்டது. 

இந்த சட்டம் வெளிப்படை-யாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதால் நியமன எம்.எல்.ஏ.க்கள் அவசியம் இல்லை என்று வாதிடலாம்.
மத்திய அரசின் இந்த சட்டவிரோத செயலை கவர்னர் தடுத்து நிறுத்த-வில்லை.இன்றைக்கு இப்பிரச்சினையை உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு எடுத்துச் சென்றாலும் இப்போது நியமிக்கப்பட்டுள்ள 3 எம.எல்.ஏ.  நியமனமும் சட்டவிரோதம் என்ற அடிப்படையில் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியும். 

அதோடு நியமனம்.செய்வதற்கான சட்ட விதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும். 
அதன்மூலம் சட்டத்தின் அடிப்படையில் நியமன உறுப்பினர்கள் சரியான முறையில் நியமிக்கப்படுவார்கள் அச்சூழ்நிலையில் நியமன உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு தேவை என்பதை புதுவை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Similar News