உள்ளூர் செய்திகள்
திருநங்கைகளுக்கு சுகாதார பொருட்கள் வழங்கிய போது எடுத்த காட்சி.

திருநங்கைகளுக்கு சுகாதார பொருட்கள்

Published On 2022-05-08 14:02 IST   |   Update On 2022-05-08 14:02:00 IST
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சார்பில் திருநங்கைகளுக்கு சுகாதார பொருட்கள் வழங்ப்பட்டது.
புதுச்சேரி:

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சார்பில் உலக ரெட்கிராஸ் தினம்  சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தில் நடைபெற்றது.  

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுவை கிளையின் சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமை தாங்கி திருநங்கைகளுக்கு குளியல் சோப், சலவை சோப், தேங்காய் எண்ணெய், உள்ளிட்ட சுகாதார பொருட்களை  வழங்கினார்.

நிர்வாக குழு உறுப்பினர்கள் அய்யனார், ராமன் மற்றும் சகோதரன் சமூக நல மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் ஷீத்தல் நாயக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ரெட் கிராஸ் சொசைட்டி ஆயுட்கால உறுப்பினர்கள் குப்புசாமி, சேதுபதி, ரமேஷ், கார்த்திகேயன், ஆதி மூலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News