உள்ளூர் செய்திகள்
.

சிங்காரபேட்டை அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்

Published On 2022-05-08 13:45 IST   |   Update On 2022-05-08 13:45:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே கள்ளக்காதலனுடன் 2 குழந்தைகளின் தாய் மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரபேட்டை அடுத்துள்ள எக்கூர் காமாட்சி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி கவிதா (வயது25). இவர்களுக்கு சுதர்சன் (4), கீர்த்திஸ்ரீ (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் கவிதாவுக்கு அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இதனை சத்தியராஜ் தனது மனைவியை கண்டித்துள்ளார்.  இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. 

நேற்று கவிதா தனது 2 குழந்தைகளுடன் ஏரி வேலைக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து சத்தியராஜ் சிங்காரபேட்டை போலீசில் எனது மனைவி மற்றும் குழந்தைகளை சுகுமார் என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என்று புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News