உள்ளூர் செய்திகள்
ராஜேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை படத்தில் காணலாம்.

நெல் எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால் துண்டானது

Published On 2022-05-07 15:53 IST   |   Update On 2022-05-07 15:53:00 IST
கந்திகுப்பம் அருகே நெல் எந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் கால் துண்டானது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த தாண்டவன்பள்ளம் கிராமத்தை சோந்தவர் ராஜேந்திரன் (வயது60). கூலி தொழிலாளி. 

இவர் பர்கூர் அருகே உள்ள சின்னகாரக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (31) என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை செய்யும்  எந்திரத்தில் பணியாற்ற கடந்த 4-ந் தேதி பிஆர்ஜி.மாதேப்பள்ளி பகுதிக்கு சென்றுள்ளார்.

 அப்போது நெற்கதிர்களை எந்திரத்தில் விட, எந்திரத்தின் மீது ஏறியுள்ளார். அப்போது நிலை தடுமாறி, எந்திரத்தில் ராஜேந்திரன்  இடது கால் சிக்கி, முழங்காலுக்கு மேல்வரை நசுங்கி துண்டாது. 

இதில் படுகாயமடைந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு, கந்திகுப்பம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். 
இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News