உள்ளூர் செய்திகள்
.

பள்ளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

Published On 2022-05-07 15:46 IST   |   Update On 2022-05-07 15:46:00 IST
பர்கூர் அருகே பள்ளத்தில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த காரகுப்பம்  இருளர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள சின்ன ஏரிக்குட்டை ஏரிக்கு பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி வளைவில் திரும்பும் போது, சின்னஏரிக்குட்டை ஏரி தடுப்புசுவருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்போது டிரைவர் லாரியில் இருந்து குதித்து தப்பினார். 

தகவலின்படி பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக லாரி கவிழ்ந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை.

Similar News