உள்ளூர் செய்திகள்
.

கடன் தொல்லையால் கார் மெக்கானிக் தற்கொலை

Published On 2022-05-05 13:32 IST   |   Update On 2022-05-05 13:32:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கடன் தொல்லையால் கார் மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த சப்பானிபட்டியில்  கார் செட் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் அரவிந்தன் (வயது 35) இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

 இந்நிலையில் தொழில் சம்பந்தமாக பல்வேறு இடங்களில் அரவிந்தன், கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால் கடன் தொல்லை காரணமாக அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் பூச்சி மருந்து குடித்து அரவிந்தன் மயங்கி விழுந்தார். 

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து காவேரிப்பட்டணம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் 

Similar News