உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி இளைஞர்களுக்கு வயது தளர்வு அங்காளன் எம்.எல்.ஏ. மனு
அரசு வேலைவாய்ப்பில் புதுவை இளைஞர்களுக்கு வயது தளர்வு கவர்னர் தமிழிசையிடம் அங்காளன் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் புதுவை கவர்னர் தமிழிசையிடம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
புதுவை கடந்த 10 ஆண்டுகளாக அரசு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் புதுவை இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளாக அரசு வேலை பெறாமல் இருந்து வருகின்றனர். தற்போது புதுவை அரசு எல்.டி.சி. யூ.டி.சி., ஸ்டோர் கீப்பர் போன்ற வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது புதுவை இளைஞர்களுக்கு வயது தளர்வு அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.