உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரங்கசாமி வாழ்த்து
பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது.
அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளின் காரணமாக புதுவையில் தற்போது கொரோனா பரவல் வெகுவாகக் குறைந்து கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதை தொடர்ந்து நாளை பிளஸ்-2 பொதுத் தேர்வும், நாளை மறுநாள் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வும் நடைபெற உள்ளது.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் நன்றாக பயின்று தேர்வுக்குத் தயாராக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் உயர்கல்வியைப் பயிலும் வாய்ப்பைப் பெற முடியும்.
எனவே, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகள் அனைவரும் நல்ல முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் நல்ல நிலையை அடைய எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.