உள்ளூர் செய்திகள்
ஏ.எப்.டி.மில்லில் இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்த காட்சி

இரும்பு பொருட்களை திருடிய 2 பேர் கைது

Published On 2022-05-04 08:57 GMT   |   Update On 2022-05-04 08:57 GMT
ஏ.எப்.டி.மில்லில் இரும்பு பொருட்களை திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டையில் பழமையான ஏ.எப்.டி. மில் உள்ளது. இந்த மில் செயல்படாததால் பல லட்சம் மதிப்புள்ள எந்திரங்கள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த எந்திர பாகங்களை அவ்வப்போது மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர்.

இந்த நிலையில் 2 வாலிபர்கள் மில்லின் உள்ளே அத்துமீறி நுழைந்து அங்கிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றனர். 

இதனை அறிந்த மில்லின் காவலாளி நடராஜன் இது குறித்து முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில் இரும்பு பொருட்களை திருடியது உப்பளம் நேதாஜி நகர் அசோகன் தெருவை சேர்ந்த பெயிண்டரான முத்து குமரன் (வயது 26) என்பதும் மற்றொருவர் வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பை சேர்ந்த பிரவின் குமார் (23), என்பதும் தெரியவந்தது.

பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட பிரவின் குமார் மீது ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் மூதாட்டியை கற்பழித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News