உள்ளூர் செய்திகள்
சாலையில் ஸ்கூட்டரில் சாகசம் செய்தப்படி ஆபத்தான முறையில் செல்லும் இளைஞர்கள்.

ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சாகசம் செய்யும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பு

Published On 2022-05-04 14:03 IST   |   Update On 2022-05-04 14:03:00 IST
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சாகசம் செய்யும் இளைஞர்கள் குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர், 

சமீப காலங்களாக, சாலைகளில் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்களில் செல்லும் இளைஞா்கள் சிலர், ஆர்வக்கோளாறினால் சாகசத்தில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.

அந்த வரிசையில், ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சூளகிரி நோக்கி ஸ்கூட்டரில் சென்ற 2 இளைஞர்களில், வண்டியை ஓட்டிச்சென்றவர் பவர்கிரீட் பகுதி அருகே சென்றபோது, திடீரென சிறிது தொலைவு வரை சாகசத்தில் ஈடுபட்டவாறு செல்லும் காட்சி, வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பதைபதைப்பை ஏற்படுத்தின. 

தேசிய நெடுஞ்சாலையில் இதுபோல் வீலிங் செய்து செல்வது, அபாயத்திற்கு வழிவகுக்கும் என்பதை ஏனோ அந்த இளைஞர்கள் மறந்துவிட்டனர்? இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு மட்டுமின்றி எதிரே வரும் வாகனங்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். 

காவல்துறையினரும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்களை தீவிரமாக கண்காணித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Similar News