உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் 4 பேருக்கு கொரோனா
புதுவையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 338 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேருமே புதுவையை சேர்ந்தவர்கள். காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தொற்று கண்டறியப்படவில்லை.
தொற்றால் பாதி க்கப்பட்ட யாரும் மருத்து வமனையில் அனு மதிக்கப்படவில்லை. வீட்டு தனிமையிலேயே வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது 9 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். 3 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 2 பேர் புதுவை, ஒருவர் காரைக்காலை சேர்ந்தவர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 794 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 823 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 1962 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தகவல்களை சுகாதார த்துறை தெரிவித்துள்ளது.