உள்ளூர் செய்திகள்
.

குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி பெண்ணிடம் 60 ஆயிரம் பணம் மோசடி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார்

Published On 2022-05-03 13:31 IST   |   Update On 2022-05-03 13:31:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறி மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள பாகலூர் பெல்லத்தூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது40). இவரது ெசல்போன் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வந்தது. 

அதில் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறப்பட்டு இருந்தது. இதனை நம்பிய மஞ்சுளா உடனே அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 

அந்த நபர் முதலில் நீங்கள் 60 ஆயிரம் பணம் கட்ட வேண்டும் பிறகு உங்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புகிறேன் என்றார். இதனை நம்பிய மஞ்சுளா உடனே அந்த வங்கி கணக்கிற்கு பணம் 60 ஆயிரத்தை அனுப்பியுள்ளார்.

ஆனால் பல மாதங்கள் ஆகியும் மஞ்சுளாவுக்கு பணம் எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர் நேற்று கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். 

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News