உள்ளூர் செய்திகள்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மேதின கூட்டம் நடந்த காட்சி.

ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்- உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Published On 2022-05-03 10:27 IST   |   Update On 2022-05-03 10:27:00 IST
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் என்று உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:

உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் மேதின விழா பீம்சேனா பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. 

விழாவிற்கு முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி தலைமை தாங்கினார். தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜகணேஷ் சிறப்புரையாற்றினார். கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்றார். 

பீம்சேனா நிர்வாகிகள் பழனிச்சாமி, பகிரதன், ரமேஷ், சந்திரன் முன்னிலை வகித்தனர். சமூக இயக்க நிர்வாகிகள் அருள்தாஸ், திருமால், மோகனசுந்தரம், அங்காளன், அய்யனார், ஆதிகேசவன் ஆகியோர் உரையாற்றினர்.
 
தொழிற்சங்க தலைவர்கள் தாயார், இருதயமேரி, மரகதம், மஞ்சுளா, கயல்விழி ஆகியோர் தொழிலாளர் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினர். 

நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளர் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம், வீட்டு பணியாளர் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.  தொழிலாளர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன. 
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மாநிலத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை முழுமையாக வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்து, அவர்களுக்கு மருத்துவ உதவி, விபத்து நிவாரணம், பண்டிகை இனாம், கல்வி உதவி, ஓய்வு ஊதியம் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை முறையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை முழுமையாக கிடைக்க தேவையான 
ரூ. 200 கோடி நிதியை மத்திய அரசிடமிருந்து பெற்று வர புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதுவை மாநிலத்தில் ஒப்பந்தம் மூலம் துப்புரவு பணி செய்யும் தொழிலாளர்களின் மாத சம்பளம் ரூ.18 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும். 

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் மங்கையர்கரசி, சித்தார்த்தன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Similar News