உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளரின் கணவர் கைது- 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பிய அ.தி.மு.க. ஒன்றிய துணை செயலாளரின் கணவர் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம அடுத்த கணக்கம்பாளையம் ஊராட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் தமிழரசி. இவர் டி.என்.பாளையம் ஒன்றிய அ.தி.மு.க. துணைச்செயலாளராக உள்ளார். இவரது கணவர் ஈஸ்வரன் என்கிற அர்த்தனாரீஸ்வரன் (50) அ.தி.முக. உறுப்பினர்.
அர்த்தனாரீஸ்வரன் 8 வழிச்சாலை குறித்து தமிழக முதல்-அமைச்சர் பற்றி வாட்ஸ்அப் மூலம் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டார். இதுகுறித்து கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த திருமுருகன் என்பவர் பங்களாபுதூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அர்த்தனாரீஸ்வரன் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அர்த்தனாரீஸ்வரன் மீது அரசுக்கு எதிராக அவதூறு பரப்புதல், வதந்தியை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.