உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

Published On 2022-05-02 14:01 IST   |   Update On 2022-05-02 14:01:00 IST
ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:

ரோட்டில் நடந்து சென்ற வாலிபரிடம் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.


ஈரோடு கொங்கம்பா–ளையம், அம்பேத்கர்நகரை சேர்ந்தவர் பன்னீர்செ–ல்வம். இவரது மகன் மோகன–சுந்தர்(25). இவர் ஈரோடு ராசாம்பாளையம் சாலையில் சம்பவத்தன்று  நடந்து சென்றார். 

அப்போது அவ்வழியாக 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் மோகனசுந்தரை மிரட்டி சட்டை பாக்கெட்டில் இருந்த விலை உயர்ந்த ஸ்மார்ட்  செல்போன் மற்றும் ரொக்கம் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.  செல்போ–னின் மதிப்பு ரூ. 12 ஆயிரம் ஆகும்.

இது குறித்து மோகன–சுந்தர்  வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் வீரப்பன் சத்திரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு க்கொண்டிருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். 
   
விசாரணையில் அவர்கள் மனோஜ் குமார்(22), பாலசுப்பிரமணியம் (19), மற்றும் 18 வயதுக்கு–ட்பட்ட சிறுவன் என தெரியவந்தது. இவர்கள்தான் மோகன–சுந்தரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் மனோஜ் குமார், பாலசுப்பிரமணியம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். 18 வயதுக்குட்பட்ட சிறுவனை கோவையில் உள்ள சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

Similar News