உள்ளூர் செய்திகள்
அந்தியூரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
அந்தியூர்:
அந்தியூரில் உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
அந்தியூர் அரசு மருத்துவ மனையில் உலக பூமி தினத்தை முன்னிட்டு அந்தியூர் அரசு மருத்துவமனை மற்றும் அல்ட்ரா தொண்டு நிறுவனம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
இதில் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் விஸ்வேஸ்வரன் தலைமையில் அரசு மருத்துவ மனையை சுற்றியுள்ள காலி இடங்களில் தூய்மைப் பணி செய்து மரக்கன்றுகள் நடப்பட்டது.
அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுத பாணி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ராம்குமார் பூமி தினத்தின் சிறப்புகளையும் மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள், மண்ணின் வளங்கள்பற்றி விளக்கி பேசினார்.
தொடர்ந்து அவர் பேசும் போது, பூமியும் குளிர்ச்சி அடைந்து மழை வளத்தை பெருக செய்து மக்களின் தேவைகள் அனைத்தையும் சரி செய்யக் கூடிய வல்லமை கொண்ட இந்த மரங்களை நாம் ஒவ்வொரும் தங்கள் வீடுகளில் உள்ள காலி இடங்களில் நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து நம் எதிர்கால சந்ததிகளுக்குதூய்மையான காற்றை சுவாசிக்க அனை வரும் பாடுபட வேண்டும் என்றார்.
இதில் டாக்டர் மலர்விழி, அந்தியூர் அரசு மருத்துவமனை செவிலி யர்கள், பணியாளர்கள் அந்தியூர் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.