உள்ளூர் செய்திகள்
வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க வந்த யானைகள்

தாளவாடியில் வனக்குட்டையில் தண்ணீர் குடித்த யானைகள்

Published On 2022-05-02 10:16 IST   |   Update On 2022-05-02 10:16:00 IST
தாளவாடியில் வனகுட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டியுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி,தலமலை, ஜூர்கள்ளி, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், பவானிசாகர், விளாமுண்டி, சத்தியமங்கலம் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.

இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, மான், செந்நாய், கரடி, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மலைப்பகுதியில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் குளம், குட்டைகள் தண்ணீர் நிரம்பி காணப்படுகின்றன.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட மகாராஜன்புரம் அருகே வனக்குட்டை அமைந்துள்ளது. இந்த வனகுட்டையில் தண்ணீர் இருப்பதால் வனப்பகுதியில் உள்ள யானைகள் குட்டியுடன் கூட்டமாக வந்து தண்ணீர் குடித்து செல்கிறது. சில நேரங்களில் யானைகள் குட்டையில் குளித்து கும்மாளமிட்டு வருகிறது.

எனவே வனப்பகுதிக்குள் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வனத்துறையினர் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Similar News