உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் மது கடத்தி சென்ற 2 பேர் கைது
கருங்கல்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
கருங்கல்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் மது கடத்தி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு கருங்கல்பா–ளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பா–ளையம் அடுத்த கிருஷ்ண–ம்பாளையம் கமல் நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி–ருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அவர்களது நடவடிக்கை சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில் அவர்கள் அனுமதியின்றி மது விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சதீஷ்குமார்(31), சண்முகசுந்தரம் (51), என தெரியவந்தது. இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து அவர்களிடம் இருந்து 162 மதுபாட்டில்கள், மோட்டார் சைக்கிள்கள் போலீசார் பறிமுதல் செய்தனர்.