உள்ளூர் செய்திகள்
அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சி.சி.டி.வி. கேமிரா தொடங்கி வைத்த காட்சி.

குற்றங்களை தடுக்க 4 சி.சி.டி.வி. கேமரா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

Published On 2022-05-01 14:01 IST   |   Update On 2022-05-01 14:01:00 IST
மேல் சாத்தமங்கலத்தில் குற்றங்களை தடுக்க 4 சி.சி.டி.வி. கேமிரா அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

மங்கலம் தொகுதி மேல்சாத்தமங்கலம் கிராம மக்கள் சார்பில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கிராம நுழைவு வாயில், கோவில், அரசு பள்ளி கூடம் உட்பட  4  பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது இதனை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள தெரு விளக்குகளை எல்.இ.டி. பல்புகளை மாற்றி அதனை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார் நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் ராஜவேலு, வேல்முருகன், பரமசிவம் , பலராமன், வாழ்முனி, சக்திவேல் ஜானகிராமன், அய்யப்பன், சிவமணி, சிவபாலன் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News