உள்ளூர் செய்திகள்
தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் எழுத்தாளர்களுக்கு விரு

தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதிதாசன் விழா

Published On 2022-05-01 10:44 IST   |   Update On 2022-05-01 10:44:00 IST
தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதிதாசன் விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் புதுவை கிளை சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா, நூல் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு தேசிய தலைவர் பெரியண்ணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் இதயகீதம் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் பிரபாகரன் நோக்க உரையாற்றினார். இணை செயலாளர் அரங்க.முருகையன் அறிமுக உரையாற்றினார். டெல்லி கலை இலக்கிய பேரவை பொதுச்செயலாளர் குமார் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். 

விழாவில் புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு விருது வழங்கி பேசினார். இதனை தொடர்ந்து நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலினை பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி தாளாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். அதனை தமிழ் ஆர்வலர் தனசேகரன் பெற்றுக்கொண்டார். 

முடிவில் சங்க பொருளாளர் குணசேகர் நன்றி கூறினார். இந்த விழாவில் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

Similar News