உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

Published On 2022-04-30 15:19 IST   |   Update On 2022-04-30 15:19:00 IST
சென்னிமலை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை:

சென்னிமலை அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னிமலையில் இருந்து பெருந்துறை ஆர். எஸ். செல்லும் வழியில் உள்ளது கோரக்காட்டு வலசு. சென்னிமலையில் இருந்து நூல் கோன் பைகளை ஏற்றிய சரக்கு வேன் ஒன்று பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வழியாக பள்ளிபாளையத்திற்கு சென்றது.

  இந்த வேன் கோரக்காட்டு வலசு அருகே சென்றபோது திடீரென வேனின் டயர் பஞ்சரானது.  இதில் நிலைதடுமாறிய வேன் தலைகுப்புற கவிழ்ந்தது.

 இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. நடுரோட்டில் வேன் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக இந்த வேனில் இருந்த கோன் பைகளை வேறு வாகனத்தில் ஏற்றி அந்த வேனை எடுத்துச் சென்றனர்.

Similar News