உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தொழில் தொடங்க மானியம்- ரங்கசாமி அறிவிப்பு

Published On 2022-04-30 14:41 IST   |   Update On 2022-04-30 14:41:00 IST
புதுவையில் ெதாழில்தொடங்க மானியம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:

இந்திய தொழிலககங்கள் கூட்டமைப்பின் தென்மண்டல கவுன்சில் கூட்டம் புதுவை அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது.தென் இந்தியாவைச் சேர்ந்த 6 மாநிலங்களில் செயல்படும் பல்வேறு தொழிற்சாலைகளின் முதன்மைச் செயல் அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

புதுவையில் பெரிய தொழிற்சாலைகள் வரவேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். இளைஞர்களுக்கு அதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும். புதுவையில் நல்ல கல்வி கொடுக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.அங்குள்ள ஏழை மாணவர்களும் மருத்துவம் தொழில் கல்வி படிப்பதற்கு சிரமம் இல்லாமல் இருக்க ஏதுவான சூழ்நிலைகளை நாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறோம். 

புதுவையில் குடிநீர் வசதி, சாலை வசதி சிறப்பாக உள்ளது. விமான போக்குவரத்தும் இப்போது தொடங்கியிருக்கிறோம். தமிழகத்தில் 300 ஏக்கர் பரப்பளவிலான இடங்களை கையகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அந்த திட்டம் முடிந்தால் பெரிய விமானங்கள் வந்து செல்வ தற்கு ஏதுவாக இருக்கும். எங்கள் பிள்ளைகள் சிறந்த கல்வி உடையவர்கள். அவர்களுக்கு வேலை தர வேண்டியதும் அவசியமாக இருக்கிறது.உங்கள் பார்வையில் அவர்களுக்கு பயிற்சி தேவை இருக்கும் என்று நான் நம்புகிறேன். அந்தப் பயிற்சிகளை மத்திய அரசோடு சேர்ந்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.

எளிமையான முறையில் தொழில் தொடங்கு வதற்கான உரிமங்களை வழங்குவதற்கு எங்கள் அரசு உதவியாக இருக்கும்நல்ல தொழி ற்சாலைகள் புதுவையில் வர வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம். அதற்காக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க ஆர்வமுடன் இருக்கிறோம்.தொழில் முனை வோர்கள் புதுவையில் தொழில் தொடங்க வந்தால் அரசுக்கு வருவாய் கிடைப்பதுடன் எங்கள் மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

அதற்கு ஏதுவாக தொழிற்சாலைகளுக்கு நாங்கள் உதவிகரமாக இருக்க விரும்புகிறோம். உரிமங்களை விரைவாக கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் தொழில் தொடங்க முன்வ ருவோருக்கு மானியம் வழங்குவது தொடர்பாக வருகிற பட்ஜெட் கூட்ட த்தொடரில் பேசி முடிவு எடுக்கப்படும் உரிமங்களை சிங்கல் விண்டோ சிஸ்டம் அடி ப்படையில் கொடுப்பதற்கும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். 

தொழில் முனைவோர்களுக்கு செய்து கொடுக்கும் உதவிகளால் நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லி மற்ற தொழிற்சாலைகள் புதுவையில் வருவதற்கு உதவி செய்ய வேண்டும்.புதுவையில் கடல் வளம் உள்ளது. அந்த வளத்தைப் பயன்படுத்தி சுற்றுலா வளர்ச்சியை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். 

உங்களைப் போன்ற வர்கள் சுற்றுலா தொடர்பான தொழில் நன்கு அறிந்தவர்கள் அதற்கு நீங்களும் உதவி செய்ய வேண்டும். புதுவையில் ஐ.டி.  தொழில் மற்றும் மருத்துவப் பூங்கா போன்ற தொழிற்சாலைகள் அமைக்க உகந்த சூழல் இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தருவதற்கு அந்த தொழிற்சாலைகளை நீங்கள் இங்கு தொடங்க வேண்டும். இவ்வாறு  ரங்கசாமி பேசினார். 
 
கலந்துரையாடலில் தென்மண்டல சி.ஐ.ஐ. தலைவர்  சுசித்ரா எலா,  துணை தலைவர் கமல் பாலி, தலைவர் சுரேந்தர் துணைத் தலைவர் ஜோசப் ரோசாரியோ தென் மண்டல சி.ஐ.ஐ.யின் மண்டல இயக்குனர் ஜெயேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News