உள்ளூர் செய்திகள்
தொழிற்சாலையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தியகாட்சி.

தொழிற்சாலையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2022-04-30 14:33 IST   |   Update On 2022-04-30 14:33:00 IST
நெட்டப்பாக்கம் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
புதுச்சேரி

நெட்டப்பாக்கம் அருகே ஏரிப்பாக்கம்- நத்தமேடு கிராமத்தில் பல ஆண்டுகளாக இரும்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகின்றது.

இந்த தொழிற்சாலையில் வட மாநிலங்களை சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இதற்கிடையே இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகை அந்த கிராமத்தை சுற்றிலும் சூழ்ந்து மூச்சுத்தினறல் ஏற்பட்டு பாதிப்படைவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இப்பகுதியை சேர்ந்த சிலருக்கு புற்றுநோய், நுரையீரல் சம்பந்தப்பட்ட  பல்வேறு நோய்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று  வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இந்த தொழிற்சாலையை  கண்டித்து  இன்று காலை ஏரிப்பாக்கம் - நத்தமேடு கிராம பகுதியைச் சேர்ந்த 100-க்கும்   மேற்பட்ட பொதுமக்கள் தொழிற்சாலை நுழைவு வாயிலை இழுத்து பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த நெட்ட ப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் -இன்ஸ்பெக்டர்  கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தொழிற்சாலை மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று பந்தல் அமைத்து  கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டமும்  பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Similar News