உள்ளூர் செய்திகள்
அமைச்சர் செந்தில் பாலாஜி

அடுத்த மாத தேவையை சமாளிக்க 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்- அமைச்சர் தகவல்

Published On 2022-04-30 13:12 IST   |   Update On 2022-04-30 15:38:00 IST
அடுத்த மாதம் (மே) வெயிலும் உச்சமாக இருக்கும் மின் தேவையும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமாளிக்க 3 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் அதிகரித்து வருவதால் மின் பயன்பாடும் மிகவும் உயர்ந்துள்ளது. மின் தேவையை சமாளிக்க மின்சாரவாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் மின்சார விநியோகம் குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-

சீரான மின்விநியோகத்துக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்பமாற்று ஏற்பாடுகள் மூலம் மின்தேவை சரி செய்யப்படுகிறது. சீரான மின் வினியோகம் நடக்கிறது.

எப்போதும் 500 மெகாவாட் மின்சாரம் கையிருப்பில் இருக்கும்படி பார்த்து கொள்ளப்படுகிறது.

அடுத்த மாதம் (மே) வெயிலும் உச்சமாக இருக்கும் மின் தேவையும் மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை சமாளிக்க 3 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது.

மின்வாரியம் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News