உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்களில்ரூ .1,000 கோடி கனிம வளங்கள் கொள்ளை- திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் பேட்டி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில் நிலங்களில் ரூ.1,000 கோடி அளவிற்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனர்ஆ .ராதாகிருஷ்ணன் கூறினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திருத்தொண்டர்கள் சபையின்நி றுவனர் ஆ.ராதாகிருஷ்ணன் வந்தார். அவர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பது தொடர்பாக கலெக்டர் ஜெயசந்திரபானுவுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாக்களில் கோவில்நி லங்களில் அதிக அளவில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலம் ஆஞ்சநேயர் சாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள், அங்கு கனிம வளங்கள் கொள்ளை போவது தொடர்பாக நான் ஆய்வு நடத்த வந்துள்ளேன். தருமபுரி மண்டலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக கோவில்களில் மறைக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது.
இமயம் முதல் குமரி வரையில் சட்டம் அனைவருக்கும் சமம்.
ஆனால் இந்த பகுதியில் அறநிலையத்துறை சரியாக இயங்கவில்லை. அறநிலையத்துறையின் ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆவணங்கள்இ ங்கு இல்லை.
எந்த கோவில்களுக்கு எவ்வளவு சொத்து மதிப்பு என்று தெரியவில்லை. இங்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகம்தொ டங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகிறது. அங்கு எந்த ஆவணங்களும் முறையாக பேணப்படவில்லை.
தமிழகத்தில் 47 ஆயிரம் ஏக்கர் கோவில் நிலங்கள் காணாமல் போய் உள்ளதாக தெரிவித்துள்ளார்கள். கோவில்களில் தண்ணீர் தொட்டி, கால்நடைகளுக்கான இடம், மற்றும் கோவில்களுக்கான சொத்து என்று கணக்கிட்டால் மாநிலம் முழுவதும் 5 லட்சம் கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கோவில் நிலங்களில் உள்ள ஆயிரம் கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த மாவட்டத்தில்பு கழ் பெற்ற பேட்டராய சாமி கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு சிலைகள்தி ருட்டு போனது. அதன் நிலை என்ன என்று தெரியவில்லை. நகை, ஆவணங்கள்எதுவும் மதிப்பீடு செய்யப்படவில்லை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்கு காரணமாக அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் ஆஞ்சநேயர் சாமி கோவிலை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், கோவிலுக்கு சொந்தமான ஆவணங்களை பார்வையிட்டார்.