உள்ளூர் செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்றவர் கைது
காவேரிப்பட்டணம் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சப்பானிபட்டி-கும்பரா அள்ளி ரோட்டில் கஞ்சா விற்ற 3 பேர் போலீசாரை கண்டதும் ஓடினர். உடனே போலீசார் விரட்டி பிடித்தனர். அதில் 2 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவன் மட்டும் பிடிப்பட்டான்.
விசாரணை நடத்தியதில் ருத்ரன் என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.