உள்ளூர் செய்திகள்
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு தெரிவித்த போது எடுத்த காட்சி.

முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு

Published On 2022-04-30 10:03 IST   |   Update On 2022-04-30 10:03:00 IST
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:

புதுவை முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் செல்வமணி, ராமமூர்த்தி மற்றும் தோமினிக் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரை சந்தித்தனர். 

அப்போது முன்னாள் ராணுவ வீரர்கள் லீக்கின் கோரிக்கையை ஏற்று 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர் வெற்றியினை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டமைக்காக அவர்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Similar News