உள்ளூர் செய்திகள்
வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மலர்கண் பாராட்டிய போது எடுத்த படம்.

எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-04-30 09:57 IST   |   Update On 2022-04-30 09:57:00 IST
எம்.ஐ.டி. கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு எம்.ஐ.டி. எஞ்சினீயரிங் கல்லூரியில் தனியார் நிறுவனம் மூலம்  என்ஞினீயரிங் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது இந்த முகாமுக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் துணைத்தலைவர் சுகுமாரன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். 

இந்த முகாமில் அனைத்து துறைகளை சேர்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில்  8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணியாணை வழங்கபட்டது. 

பணியாணை பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மலர் கண் பாராட்டினார்.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு அதிகாரி டாக்டர் ஜெயக்குமார், மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஒருங்கினைப்பாளர்கள் செய்திருந்தனர். 

Similar News