உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

விரக்தியில் மாற்று கட்சியினரை தரம் தாழ்ந்து நாராயணசாமி விமர்சிக்கிறார்: அ.தி.மு.க. கண்டனம்

Published On 2022-04-29 15:25 IST   |   Update On 2022-04-29 15:25:00 IST
விரக்தியில் மாற்று கட்சியினரை தரம் தாழ்ந்து நாராயணசாமி விமர்சிக்கிறார் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 புதுவை மாநிலத்தின் முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி விரக்தியின் விளிம்பில் மாற்றுக் கட்சியினரை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார். 5 ஆண்டுகாலம் முதல்-அமைச்சராக இருந்தவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதால் உண்மையான காங்கிரசை சேர்ந்தவர்கள் ஒருவர் கூட வெற்றி பெற இயலவில்லை என்பதை மறந்து பேசுகிறார்.

அதேபோன்று தற்போது காங்கிரஸ் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 எம்.எல்.ஏ.கக்களும் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல.  ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு கட்சிகளில் உள்ள பிரபல மான மனிதர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டி யிட வாய்ப்பு அளித்து அதன்மூலம் வெற்றி யடைந்து தான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமாகும். 

அதையே மாற்று கட்சியினர் செய்யும் போது பொறுத்து கொள்ள முடியாமல் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது அநாகரிகமான செயல் ஆகும். 5 ஆண்டு காலம் முதல்-அமைச்சராக இருந்த நாராயணசாமியை சி.பி.ஐ. எதை சொல்லி மிரட்டியதால் அவர் போட்டியிடவில்லை என்பதை பகிரங்கமாக பொய் சொல்லாமல் தெரி விப்பாரா? அதே நேரத்தில் வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன் எனக்கூறும் நாராயணசாமி ஏன் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.

சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான புதுவை மாநில  முதல்-அமைச்சர் மத்திய அரசுடன் இணக்கமாகவும் கவர்னர்  ஒத்துழைப்புடன் இருப்பதால்தான் இன்றைக்கு புதுவை மாநிலத்தில் உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.  அதேபோன்று சட்ட மன்றத்தின் அறிவிப்பு கள் மக்களின் நலன் சார்ந்தஅத்தனை திட்டங்களும் உடனுக்குடன் செயல்படுத்தி உள்ளோம் என்று எங்கள் கூட்டணியின் முதல்-அமைச்சர் ரங்கசாமி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 

இதற்குப் பிறகும் மத்திய அரசையும் கவர்னரையும் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காக தவறான குற்றச்சாட்டுகளை நாராயணசாமி தொடர்ந்து தனது பொய் அறிக்கையை வெளியிட்டு வருவது கண்டனத்துக்கு உரியது ஆகும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News