உள்ளூர் செய்திகள்
தார் சாலை பணியை அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ரூ.6 கோடியில் தார்சாலை பணிகள்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

Published On 2022-04-29 15:13 IST   |   Update On 2022-04-29 15:13:00 IST
மங்கலம்- நெட்டப்பாக்கம் தொகுதியில் ரூ.6 கோடியில் தார்சாலை பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
புதுச்சேரி:

புதுவை வில்லியனூர், நெட்டப்பாக்கம் கொம்யூன்  பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள  சாலைகள் மழையால் சேதமடைந்தது.

சாலைகளை மேம்படுத்த மதிப்பீடு தயார் செய்யப்பட்டு பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு அனுமதி பெற்றது. மங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பங்கூர் முதல் சிவராந்தகம் வரை 2 கி.மீட்டர் தூரம் ரூ.108.16 லட்சம் செலவிலும், சேந்தநத்தம் முதல் வில்லியனூர் வரை 3.440 கி.மீ. தூரம் ரூ.227.26 லட்சத்திலும், சூரமங்கலம் சந்திப்பு முதல் தொண்டி  ரெட்டிபாளையம் சந்திப்பு வரை 3.250 கி.மீ. தூரம் ரூ.229.02 லட்சத்திலும், படகுசெட்டி வாய்க்கால் முதல் ஏம்பலம் சாலை உறுவையாறு வரை  2 கி.மீட்டர்தூரம் ரூ.9,126 லட்சத்திலும் மதிப்பீடு செய்யப்பட்டது. 

இதன் மொத்த மதிப்பீடு ரூ.6 கோடியே 45 லட்சம் ஆகும். இதற்கான பூமி பூஜை விழா மங்கலம் தொகுதி பங்கூர் கிராமத்தில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமைப்பொருள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு ஆகியோர் பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். 

நிகழ்ச்சியில்  மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயலர் ரவிபிரகாஷ், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, செயற்பொறியாளர் மணவாளன் மற்றும் அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

Similar News