உள்ளூர் செய்திகள்
கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் பரிசு வழங்கி பாராட்டிய காட்சி.

திருக்குறள்-கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா

Published On 2022-04-29 15:09 IST   |   Update On 2022-04-29 15:09:00 IST
புதுவையில் திருக்குறள்-கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி:

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார் பிறந்தநாளை முன்னிட்டு முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது.

 அதன் பரிசளிப்பு விழா  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக உலக கவிஞர்கள் சங்கம் நிறுவனர் புதுவை குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 

சிறப்பு விருந்தினராக புதுவை மாநில ஒருங்கி ணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு போட்டி யில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். 

பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் பள்ளியின் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி ஆசிரியர் ஜெனிபர் சிறப்பாக செய்திருந்தார்.

Similar News