உள்ளூர் செய்திகள்
மறியல் நடந்த காட்சி.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டதால் திடீர் மறியலால் பரபரப்பு

Published On 2022-04-29 15:08 IST   |   Update On 2022-04-29 15:08:00 IST
திருவண்ணாமலையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணி நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கால்நடை மருத்துவமனை முன்பு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடைபெற இருந்த உதவியாளர் காலிபணியிடங்களுக்கான நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்ட காரணத்தால் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கால்நடை பராமரிப்பு உதவியாளர் காலிபணியிடங்களுக்கான நேர்காணல் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நேர்காணல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கடந்த 27-ந் தேதி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார் அதில் சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அலுவலக கடிதவழி தெரிவிக்கப்பட்டவாறு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் 29.04.2022 முதல் 11.05.2022 முடிய நடத்திட ஆணை வழங்கப்பட்டது. 

இதனை தற்போது நேர்காணல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் ஆணையர் அலுவலக கடிதவழி கேட்டு க்கொள்ளப்பட்டுள்ளது. என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை திருவண்ணாமலை தண்டராம்பட்டு ரோட்டில் உள்ள மாவட்ட கால்நடை பராமரிப்பு மருத்துவம்  முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது நேர்காணல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தகவல் முறையாக தங்களுக்கு தெரிவிக்கப் படவில்லை எனவும் ஏற்கனவே நடைபெறவிருந்த நேர்காணலும் இதேபோன்று நிறுத்தி வைக்கப்பட்டு அதன் பிறகு அந்த நேர்காணல் நடத்தப்படவில்லை தொடர்ந்து இதுபோன்று நடைபெறுவது மிகவும் வேதனையாக உள்ளன.

மேலும் மன உளைச்சலும் எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் இன் சம்பந்தமாக திருவண்ணாமலை போலீசார் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News