உள்ளூர் செய்திகள்
.

போச்சம்பள்ளியில் வாகன உதிரி பாகங்கள் கடையில் தீ விபத்து ரூ. 7 லட்சம் சேதம்

Published On 2022-04-29 13:17 IST   |   Update On 2022-04-29 13:17:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.7 லட்சம் சேதமானது.
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்து மேல்சங்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 42). இவர் போச்சம்பள்ளியில் தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகனங்களின் உதிரிபாகங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் வழக்கம்போல் இரவு கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். அப்போது திடீரென நள்ளிரவு ஆயில் கேன்கள், தீப்பற்றி வெடிக்கத் தொடங்கியது. இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போச்சம்பள்ளி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனே தகவலறிந்து விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் டயர்கள் ஆயில் கேன்கள் மற்றும் உதிரி பாகங்கள் என மொத்தம்  ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

 இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News